நண்பர்களுடன் மது அருந்திவிட்டு குளித்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படும் இளைஞனின் சடலத்தை கண்டு அவருடைய குடும்பத்தினர் கதறி அழுது துடித்த காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.
கொடை ரோட்டை சேர்ந்த மணி மற்றும் அவருடைய நண்பர்கள் மது அருந்திவிட்டு அணையில் குளித்த போது மணி நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கிறார். சுமார் இரண்டு நாள்களுக்குப் பிறகு இளைஞரின் உடல் நீரில் உப்பிய நிலையில் கரை ஒதுங்கியது.
இளைஞனின் சடலத்தை கண்ட குடும்பத்தினரும் உறவினர்களும் கதறி கதறி அழுத காட்சி காண்போரை கண் கலங்க வைத்தன. மீட்கப்பட்ட உடலில் சிறு சிறு காயங்கள், சிராய்ப்புகள் இருந்ததால் அவர் நீரில் மூழ்கி உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.







