பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய நிர்வாகி அங்கிதாசுக்கு கொலை மிரட்டல்..!
இணைய வழியாக தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய நிர்வாகி அங்கிதாஸ் டெல்லி காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.
சமூக வலைதளமான பேஸ்புக்கில் தேசியவாத குரல்கள் ஒடுக்கப்படுவதாக பாரதிய ஜனதாவும், ஆளுங்கட்சிக்கு சாதகமாக கொள்கைகளை வெளியிடுவதாக காங்கிரசும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த சூழலில் இணைய வழியாக தமக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக இந்தியா தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் ஃபேஸ்புக் பொதுக்கொள்கை இயக்குனர் அங்கிதாஸ் டெல்லி சைபர் கிரைம் பிரிவு காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.
அதில் தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் ஒருசிலர் தொடர்ந்து ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.







