நளினியை புழல் சிறைக்கு மாற்றக்கோரிய வழக்கு..!
வேலூர் சிறையில் உள்ள நளினியை சென்னை புழல் சிறைக்கு மாற்றக் கோரி அவரது தாயார் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை அவரது தாய் பத்மா சென்னையில் இருந்து வேலூர் சென்று சிறைத் துறை அனுமதி பெற்று சந்தித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு 80 வயது ஆவதால் தன் மகளை காண வேலூருக்கு சென்று வருவதில் சிரமம் இருப்பதால் நளினியை புழல் சிறைக்கு மாற்ற கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதி கிருபாகரன், வேலுமணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது வழக்கு குறித்து தமிழக அரசும் சிறைதுறையும் ஒரு மாதத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





