--- --:--:-- --

ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்த ஆயுதப்படை காவலர் தற்கொலை..!

2.1

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் காவல்துறையை சேர்ந்த மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஊருக்குள் எங்காவது சூதாட்டம் நடப்பதாக தகவல் கிடைத்தால் அந்த இடத்திற்கு விரைந்து செல்கிறது காவல்துறை.

 

ஆனால் யார் வேண்டுமானாலும் விளையாடலாம் ஈஸியா ஜெயிக்கலாம் இதுலதான் ஆயிரக் கணக்கில் சம்பாதித்து அந்த பணத்தை வைத்து வண்டி வாங்க போறேன் என விளம்பரம் செய்து சூதாட அழைப்பவர்களிடம் காவல் துறையை சேர்ந்தவர்களே சிக்கிக் கொள்கின்றனர்.

 

அதற்கு மற்றுமொரு உதாரணம் தான் ஆயுதப்படை காவலர் ஏழுமலை. விழுப்புரம் அடுத்த காக்குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் இருக்கும் குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் ஏழுமலை.

 

ஆன்லைனில் ரம்மி விளையாடி 10 லட்சம் ரூபாய் வரை இழந்ததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் ஏழுமலை தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையை சேர்ந்த காவலர் ஆன்லைனில் ரம்மி பணத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

காவல்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அப்பாவி இளைஞர்கள் பலரும் ஆன்லைன் சூதாட்டத்தால் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். ஆன்லைன் சூதாட்டம் விரைவில் தடை செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon