உமிழ் நீர் மூலமாக கொரொனா பரிசோதனையை தொடங்கும் முறைக்கு அமெரிக்கா ஒப்புதல்..!
உமிழ்நீர் மூலமாக கொரொனா தொற்றை கண்டறியும் சோதனைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. கொரொனா வைரஸ் தொற்றுக்கு அதிகமான பாதிப்பை கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. இதுவரை 55 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
ஒரு லட்சத்து 73 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பரிசோதனையை எளிதாக்குவதற்காக உமிழ்நீர் மூலம் சோதனை முறையை ஏல் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
இந்த சோதனை முறைளை ஊருவாக்க நிர்வாகம் அனுமதி அளித்திருக்கிறது. இதனால் பரிசோதனை கருவிகளை பற்றாக்குறை நீங்கும் என்று பரிசோதனை முறை செயல்திறன் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நேரத்தையும் செலவையும் குறைக்க இந்த முறை உதவும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.






