தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகளுடன் முழு பொது முடக்கம்…!
கொரொனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகளுடன் முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்படுகிறது. கொரொனா தொற்று இருக்கும் நிலையில் தமிழக அரசு சில தளர்வுகள் அளித்து பொது முடக்கத்தை நீட்டித்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தொடர்புகளும் இன்றி மாநிலம் முழுவதும் முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மருத்துவமனைகள், மருந்து கடைகள் விற்பனை நிலையங்கள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற கடைகள் திறக்கப்படும் நிலையில் அத்தியாவசிய தேவை என்று மக்கள் வெளியே நடமாட கூடாது என காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வந்தால் வழக்கு பதியப் படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.






