சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்படுகிறதா?
ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. மாலை 5 மணி அளவில் மேல்சாந்தி நம்பூதிரி கோவில் நடையை திறக்கிறார். தொடர்ந்து அடுத்த மாதம் ஓராண்டுக்கான பொறுப்பை தந்திரி கண்டரர் ராஜீவ்வரர் ஏற்கிறார். பூஜைகள் எதுவும் நடக்காது.
நாளை காலை 5 மணிக்கு நிர்மால்ய பூஜை, அபிஷேகம் மண்டபத்தில் கணபதி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து வரும் 21ஆம் தேதி வரை பூஜைகள் நடக்க இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






