--- --:--:-- --

இந்தியாவில் பெண்களின் திருமண வயது உயர்கிறதா?

19

ந்தியாவில் பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இது தொடர்பாக வல்லுநர் குழு அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்திருக்கிறார்.

 

இந்தியாவில் பெண்களுக்கு திருமண வயது வரம்பு 18 ஆக உள்ளது. இந்தியாவின் 16 லிருந்து 18 வயது திருமணம் செய்து கொண்ட தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்தசோகை உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

எனவே பெண்கள் திருமணம் செய்வதற்கான வயது வரம்பை உயர்த்துவதற்கான பரிசீலனை நடைபெற்று வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள வல்லுனர் குழு விரைவில் அறிக்கை அளிக்கும் எனவும் அதன் அடிப்படையில் வயது வரம்பு உயர்த்தப்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon