--- --:--:-- --

காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

11.1

காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஒடிசா மற்றும் மேற்கு வங்க பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.

 

இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon