--- --:--:-- --

தங்கத்தை விற்றுதரக்கூறிய மர்ம நபர்..! அதிர்ச்சியில் உறைந்த நடிகர்..!

10

ள்ள தங்கத்தை விற்று தந்தால் 40 சதவீத கமிஷன் கொடுப்பதாக கூறி சின்னத்திரை நடிகரை ஏமாற்ற முயற்சித்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த இவர் திரைப்பட தயாரிப்பாளர் கே ராஜனின் மகன். சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார் .

 

12ஆம் தேதி இரவு சரியாக 9 மணிக்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து சுரேஷுக்கு அழைப்பு வந்துள்ளது. போனை அட்டன் செய்த போது எதிர்முனையில் பேசிய மர்ம நபர் ஒருவர் வாட்ஸ்அப், கோல்ட், 44% என்றெல்லாம் வார்த்தைகளை கூறி இணைப்பைத் துண்டித்து இருக்கிறார்.

 

சந்தேகம் அடைந்த சுரேஷ் வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்து பார்த்தபோது அதிர்ந்து போய்விட்டார். செல்போன் எண்ணுக்கு தங்கக் கட்டிகளின் புகைப்படங்களும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் பதற்றம் அடைந்த சுரேஷ் இதன் பின்னணியில் ஏதோ மோசடி கும்பல் இருப்பதை உணர்ந்து சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

 

தங்கம் இருப்பதாக கூறி ஆசையை தூண்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ள கும்பலை பிடிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon