இயற்கை முறையில் விவசாயம் செய்யும் ஆறாம் வகுப்பு மாணவன்..!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஊரடங்கு காலத்தை பயனுள்ளதாக்கும் விதமாக ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன் இயற்கை முறையில் விவசாயம் செய்து அசத்தியுள்ளார்.
பைங்காநாடு கிராமத்தை சேர்ந்த கவின் கார்க்கி என்ற ஆறாம் வகுப்பு மாணவன் தனது வீட்டருகே உள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் பெற்றோர் உதவியுடன் வெண்டைக்காய், வேர்க்கடலை, அவரைக்காய், தர்பூசணி, கீரை மற்றும் பயறு வகைகளை பயிரிட்டு இயற்கை முறையில் பராமரித்து வருகிறார்.
ஆன்லைன் வகுப்புகளுக்கான நேரம் போக மீதமுள்ள நேரத்தை விவசாயத்தில் செலவிட்டு வருவதாகவும் இந்த பணிகள் தமக்கு உற்சாகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.






