--- --:--:-- --

டிக் டாக் செயலியை வாங்குவது தொடர்பாக ரிலையன்சுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதா?

8.1

மத்திய அரசால் அண்மையில் தடை செய்யப்பட்ட டிக் டாக் செயலியில் முதலீடு செய்வது பற்றி அதன் உரிமையாளரான பைடான்ஸ் நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் கசிந்துள்ளன.

 

இந்த வர்த்தக முதலீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த மாதமே துவங்கினாலும் இன்னும் முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக கூறி டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் தடை விதித்தது.

 

இதனிடையே மைக்ரோசாஃப்ட் ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் டிக் டாக்கை வாங்க திட்டமிடுவதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon