--- --:--:-- --

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை..!

7

ந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதியில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

 

சென்னையை ஒட்டிய இரு மாவட்டங்கள் தவிர வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

டெல்லியில் பருவமழை காலத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று அதிக மழை பெய்துள்ளது. 8:30 மணி வரையில் 99.2 மில்லி மீட்டர் அதாவது 10 சென்டி மீட்டர் அளவு மழை பெய்து இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தலைநகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

 

சாலைகள் மழை நீரில் மிதப்பதால் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. ஆகஸ்ட் மாதத்தை பொறுத்தவரை நேற்றைய நிலவரப்படி மழைப்பொழிவு வழக்கத்தை விட சுமார் 72 சதவீதம் குறைவு என்று கூறிய அதிகாரிகள் இன்றைய மழைக்கு பிறகு அது கணிசமாக குறைந்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

Leave a Reply

Right Menu Icon