சாத்தான்குளம் வழக்கில் காத்திருப்பு பட்டியலில் இருந்த எஸ்.பிக்கு மீண்டும் பணி..!
சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டைக் கொலை வழக்கு தொடர்பாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட தூத்துக்குடி எஸ்பி அருண் பால கோபாலனுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. அவர் சென்னை சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரிகள் ஓம் பிரகாஷ் ,சிபிச்சக்கரவர்த்தி, ஜெயலட்சுமி, கண்ணம்மாள் உட்பட 9 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.







