விவசாய கடன்களை ரத்து செய்யும் திட்டம் இல்லை..!
கொரொனா காலத்தை கருத்தில் கொண்டு விவசாய கடன்களை ரத்து செய்யும் திட்டம் ஏதுமில்லை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ தமிழகத்தில் விரைவில் மூன்றாயிரத்து 501 நகரும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும் எனவும் பிற்காலத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளதால் கடன் தள்ளுபடி கிடையாது என்றும் தெரிவித்தார்.







