--- --:--:-- --

இலங்கை தாதா அங்கொடா லொக்கா வழக்கில் காதலி உள்ளிட்ட மூவரையும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி..!

1

இலங்கை நிழல் உலக தாதா அங்கொடா லொக்கா வழக்கில் அவரது காதலி உள்ளிட்ட மூவரையும் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

முன்னதாக அங்கொடா லொக்காவின் காதலி அமானி தாஞ்சி, வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, தியானேஸ்வரன் ஆகிய மூவரும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 

அப்போது அவர்களை திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று போலி ஆவணங்கள் தயாரித்து பயன்படுத்தியது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்பதால் பத்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க விசாரணை அதிகாரி அனுமதி கோரினார்.

 

மேலும் கோவையில் அங்கொடா லொக்கா தங்கியிருந்த வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட மருத்துவமனை ரசீது என்ற செய்து திருப்பூரில் தியானேஸ்வரன் தங்கியிருந்த வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை குறிப்பிட்டு அதிகாரிகள் அனுமதி கோரினர்.

 

முன்னதாக 5 நாட்கள் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் நீதிபதி முன்பு சிபிசிஐடி விசாரணை அதிகாரி பத்து நாட்கள் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அங்கொடா லொக்காகாவின் காதலி உள்ளிட்ட மூவரையும் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon