--- --:--:-- --

காட்டு யானை தாக்கி ஒருவர் படுகாயம்.வனத்துறையினர் விசாரணை !!!!

8.1

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள கடமான் கோம்பை பகுதியில் ரங்கராஜன் என்பவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, வனப்பகுதியில் இருந்து வந்த ஒற்றை காட்டு யானை ரங்கராஜனை தூக்கி வீசியுள்ளது.

சம்பவம் குறித்து அறிந்த காரமடை வனச்சரகர் சரவணன் தலைமையிலான வனத்துறையினர் படுகாயமடைந்த ரங்கராஜனை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon