--- --:--:-- --

கோவை லிங்காபுரம் உயர்மட்ட பாலம் நீரில் மூழ்கியது !!!

8.3

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள லிங்காபுரம் உயர்மட்ட பாலம் நீரில் மூழ்கியது.கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையிலிருந்து 6 ஆவது நாளாக உபரி நீர் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

 

இந்த நிலையில் ஆற்றில் அதிகபட்சமாக 32 கன அடியும் குறைந்தபட்சம் 18 கன அடியும் என திறந்து படுவதனால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

 

மேட்டுபாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை, மொக்கை மேடு, ஆளுர், புலியூர் உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு அதி வாசி மக்கள் சென்று வர காந்த ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டப்பட்டது.

 

ஆனால்,முறையான அளவீடு செய்யாமல் காந்த ஆற்றில் பாலம் கட்டப்பட்டதால் மழைக்காலங்களில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95 அடிக்கு மேல் உயரும் போது பாலம் தண்ணீரில் மூழ்கி மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

தற்போது பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் பவானி மற்றும் காந்த ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது 98 அடியாக உயர்ந்தது இதன் காரணமாக விங்காபுரம் உயர் மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியது. கிராம மக்கள் விளைந்த விவசாய பொருட்கள் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

எனவே,மாவட்ட நிர்வாகம் போக்குவரத்திற்கு பரிசல் இயக்க நடடிவடிக்கை எடுப்பதோடு புதிதாக உயர் மட்ட பாலம் அமைத்து இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்திட வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon