--- --:--:-- --

விபத்தை தான் ஏற்படுத்திவிட்டு தன் நண்பர் மீது பழியை போட்ட ஆயுதப் படை தலைமைக் காவலர்..!

10

கோவையில் விபத்து ஏற்படுத்திவிட்டு நாடகமாடிய ஆயுதப் படை தலைமைக் காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த ஐந்தாம் தேதி ஆயுதப் படை தலைமைக் காவலர் நாகராஜ் வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது.

 

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் இருந்த தாயும் மகனும் படுகாயமடைந்தனர். விபத்து தொடர்பாக விசாரணை நடந்தபோது காரை தனது நண்பர் ராஜ்குமார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக ஆயுதப்படை காவலர் நாகராஜ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

 

சிசிடிவி காட்சி ஆய்வு செய்ததில் நாகராஜ் தான் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திவிட்டு நாடகமாடி இருப்பது அம்பலமானது. இதையடுத்து காவலர் நாகராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள ஆயுதப் படை துணை ஆணையருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் வழக்கை அலட்சியமாக கையாண்டதாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் அமுதா, உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon