--- --:--:-- --

கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரிப்பு..!

5.1

கேரள மாநிலம் மூணாறு அருகே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மூணாறு அருகே உள்ள ராஜ மலையில் தமிழர்கள் தங்கியிருந்த பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

 

80க்கும் மேற்பட்ட தமிழர்கள் நிலச்சரிவில் சிக்கியதில் 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவ்வப்போது பெய்த மழைக்கு நடுவே 49 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் 20 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நான்காவது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. அனைவரது உடல்களையும் மீட்க வேண்டும் என்று அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

நிலச்சரிவில் சிக்கிய உறவினர்களை காண்பதற்காக கோவில்பட்டியில் இருந்து மூணாறு செல்லும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் உறவினர்களை நேரில் சந்தித்து அமைச்சர் ஆறுதல் கூறினார்.

 

இ பாஸ் கிடைக்காதது குறித்து புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இ பாஸ் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon