--- --:--:-- --

அங்கொடா லொக்காவின் மகனை தமிழகத்திற்கு வரவழைத்து டி‌என்‌ஏ பரிசோதனை நடத்த திட்டம்..!

4

இலங்கை தாதா அங்கொடா லொக்காவின் மகனை தமிழ்நாட்டுக்கு அழைத்து வர சிபிசிஐடி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அவருக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்தி கோவையில் உயிரிழந்தது அங்கொடா லொக்காவா என்பதைக் கண்டறியவே இந்த ஏற்பாடு.

 

இலங்கை தாதா அங்கொடா லொக்கா உயிரோடு இருக்கிறாரா இல்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி. அதற்கான விடையை கண்டறிந்தால் மட்டுமே கோவையின் உயிரிழந்தது அங்கொடா லொக்காவா அல்லது லோக்கல் ஆளா என்பதை கண்டுபிடிக்க முடியும்.

 

அதன் ஒரு பகுதியாக கோவையில் உயிரிழந்த நபரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட பாகங்கள் சென்னையில் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அதில் இருக்கும் டிஎன்ஏ அங்கொடா லொக்கா மகனின் மரபணுவோடு ஒத்துப் போகிறதா என ஆய்வு செய்ய உள்ளனர்.

 

இதற்காக இலங்கையிலிருந்து அங்கொடா லொக்காவின் மகனை வரவழைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கோவையில் இருந்து மதுரைக்கு உடலை கொண்டு வர உதவியது தொடர்பாக நான்கு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

 

அங்கொடா லொக்கா மரண வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் சிவகாமசுந்தரி இலங்கையிலிருந்து மதுரைக்கு வந்த பலரை வரவேற்க விமான நிலையத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து குறிப்பிட்ட நாள்களில் மதுரை விமான நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

 

இது தொடர்பாக குடியேற்றத்துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடைபெற்றது. இதுதவிர ஓசூரில் பதுங்கியிருந்த இருவரும் சிபிசிஐடி அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர். இரண்டு பேரும் சிவகாமசுந்தரி வீட்டிற்கு அருகில் வசித்தவர்கள் என்று கூறப்படுகிறது. அங்கொடா லொக்காவின் மகன் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டால் அங்கு மர்ம முடிச்சுகள் அவிழக்கூடும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon