நியாய விலை கடை பணியாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற மறுப்பதால் ஒரு நாள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக நுழைவு வாயில் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில துணைத்தலைவர் வி.பி.தினகரன் தலைமை வகித்தார். மாநில இணை செயலாளர் எஸ்.மாரிமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.ஞானசேகரன் வரவேற்றார். கொரானா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த நியாய விலைக்கடை பணியாளர் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
கொரானா பாதிப்பால் உயிரிழந்த பணியாளர் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும். இதர துறை பணியாளர்களுக்கு அறிவித்தது போல நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் குழு காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும்.
ரேஷன் பொருட்களை நூறு சதவீதம் வழங்க வேண்டும். பொட்டலம் முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும், தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் துறை பணியாளர்களுக்கு இணையாள சம்பளம் வேண்டும், சம வேலை சம ஊதியம் வழங்க வேண்டும், பயணப்படி, ஊக்கத் தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.







