காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்மநபர்கள்..!
காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் அருகே பெட்ரோல் போடுவது போல் நடித்து இருசக்கர வாகனத்தை இளைஞர்கள் தேடி சென்றுள்ளனர். பாலூறை சேர்ந்த சேகர் என்பவரை இருசக்கர வாகனம் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இரு சக்கர வாகனம் காணாமல் போன இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்யப்பட்டது. அதில் பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்புவதற்கு மூன்று இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று உள்ளனர்.
பின்னர் அதில் இருந்த ஒரு இளைஞர் அங்கு நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் உதவியுடன் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் இருசக்கர வாகனம் திருடு போனதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.







