--- --:--:-- --

கோவை அம்மா ஐஏஎஸ் அகாடமியில் தேர்வில் வெற்றி பெற்ற கண்பார்வை இழந்த மாணவிக்கு எஸ்.பி.வேலுமணி வாழ்த்து..!

2.1

கோவை அம்மா ஐஏஎஸ் அகாடமியில் தேர்வில் வெற்றி பெற்ற மதுரையை சேர்ந்த கண்பார்வை இழந்த மாணவி பூர்ணசுந்தரி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார் !!!

 

மதுரையை சேர்ந்த கண்பார்வை இழந்த மாணவி பூர்ணசுந்தரி கோவை அம்மா IAS அகாடமியி படித்து தேசிய அளவில் 286 வது இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.இந்த நிலையில் அவர் இன்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் கோவை அம்மா ஐஏஎஸ் அகாடமியின் சேர்மனுமான அன்பரசன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.

 

இதுகுறித்துமாணவி பூர்ணசுந்தரி கூறுகையில் இது என் வாழ்நாளில் மறக்கமுடியாத நாளாக உள்ளது. ஒரு அமைச்சர் இவ்வளவு எளிமையாக இருப்பார் என்று என்னால் கனவிலும் நினைத்து பார்க்கமுடியவில்லை என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

 

தமிழக உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி மாணவியிடம் கூறும் பொழுது இது உங்களின் உழைப்பிற்கும், முயற்சிக்கும் கிடைத்த வெற்றி. உங்களை போன்ற மாணவர்கள் இந்திய அளவில் மிகப்பெரிய பொறுப்புகளை அலங்கரிக்க வேண்டும். உங்களை போன்ற மாணவர்களுக்கு எப்போதும் உதவ தயாராக இருக்கின்றேன்.

 

நீங்கள் மற்ற மாணவர்களுக்கு முன் உதாரணமாகவும், உத்வேகமாகவும் திகழ்கின்றீர்கள். எல்லாவளமும் பொற்று வாழ்வில் சாதனை படைக்க வாழ்த்துக்கள் என தனது வாழ்த்துக்களை தமிழக உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon