பூனை என நினைத்து சிங்கத்தை வளர்த்து வந்த விவசாயிக்கு அதிர்ச்சி..!
கொலம்பியாவில் விவசாயி ஒருவர் பூனை என நினைத்து மலை சிங்கத்தை எடுத்து வளர்த்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தூலிமா மாகாணத்தை சேர்ந்த எல்பர் கஷ்மன் என்ற விவசாயி சாலையில் ஒரு சின்னஞ்சிறு பூனை தனியாக இருப்பதை கண்டு இறக்கத்துடன் அதை எடுத்து தன்னுடைய வீட்டிற்கு சென்று வளர்த்து வந்துள்ளார். ஆனால் சில நாட்களில் அதன் நடவடிக்கைகளில் வித்தியாசம் தெரிய வரவே அதைப்பற்றி ஆராய்ந்தார்.
அப்போதுதான் அது பூனை இல்லை என்பதும் மலை சிங்கம் என்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வனஅதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து அந்த மலை சிங்கத்தை கைப்பற்றிக் கொண்டு சென்றனர். இந்த மலை சிங்கம் கொலம்பியா, வெனிசூலா, பிரேசில், அர்ஜென்டினா மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.







