--- --:--:-- --

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வரும் 12ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்..!

7

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வரும் 12ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர இதர மாணவர்களுக்கு அக்டோபர் 26ஆம் தேதி வரை வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அக்டோபர் 28ஆம் தேதி செய்முறை தேர்வுகள் நடைபெறும் என்றும், அவர் ஒன்பதாம் தேதி இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைவான வேலை நாட்களே இருப்பதால் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கல்லூரிகளை திறக்க அனுமதி இல்லாததால் இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்த அட்டவணையை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் தேர்வுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தன்னாட்சி அதிகாரம் பெறாத இணைப்பு கல்லூரிகளுக்கான அட்டவணையாக இதனை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon