--- --:--:-- --

இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராஜப்கச கட்சி வெற்றி..!

7

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் மகேந்த ராஜபக்சேவின் பொதுசன பிரமன கட்சி 145 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்துப் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வியை சந்தித்து இருக்கிறது.

 

இலங்கை நாடாளுமன்றத்திற்கான தேர்தல் கடந்த புதன்கிழமை 22 மாவட்டங்களிலும் நடைபெற்றது.மொத்தமுள்ள 225 இடங்களில் கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளைத் தவிர 196 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 71 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் 64 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி நேற்று தொடங்கியது.

 

இறுதி கட்ட நிலவரப்படி மஹிந்த ராஜபக்ஷவின் இலங்கை பொது ஜன பிரமுன கட்சி 145 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. தெற்கு இலங்கை பகுதி மக்களின் அமோக ஆதரவால் ராஜபக்சேவுக்கு 60 சதவீத வாக்குகள் கிடைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சஜீத் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 23.3 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

 

அதற்கு அடுத்தபடியாக ஜேஜேபி கட்சிக்கு 3.84 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.2.82 சதவீத வாக்குகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நான்காம் இடம் பிடித்துள்ள நிலையில், 2.15 சதவீத வாக்குகள் பெற்ற ஐக்கிய தேசிய கட்சிக்கு 5ஆம் இடமே கிடைத்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon