திருவாடானையில் அடித்த பலத்த காற்றால் பெரிய மரம் சாய்ந்தது விபத்து..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ஓரியூர் சாலையில் அஞ்சல் அலுவலகம் முன்பு பெரிய வேப்பமரம் ஒன்று இருந்து வந்தது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இப்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் திடீரென இன்று மாலை 4 மணி அளவில் பலமாக வீசிய காற்றில் வேப்ப மரம் வேரோடு சாய்ந்தது விபத்துக்குள்ளானது.
அருகில் வீட்டின் முன்பு போடப்பட்டிருந்த தகர செட் சேமடைந்தது. நல்வாய்ப்பாக அருகில் யாரும் இல்லை அதனால் பேராபத்துகள் தவிர்க்கப்பட்டது. எப்பொழுதும் அஞ்சல் அலுவலகத்திற்கும், தனியார் கேஸ் ஏஜென்சிக்கும் பொதுமக்கள் அதிகம் வருவதும் வேலை முடித்து அந்த வேப்பமரத்தின் இலைப்பாளி நிற்பதும் வழக்கமாக இருந்து வந்த நிலையில் இன்று மரத்தின் அருகில் யாரும் இல்லாததால் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.
திருவடனை தீயணைப்பு நிலைய அலுவலர் செங்கோல்ராஜ் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் கிளைகளை வெட்டி பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் செய்தனர்.







