இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை..!
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை முயற்சி இரண்டாம் கட்டத்தை அடைந்து உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனம் ஐசிஎம்ஆர் உடன் இணைந்து தயாரித்துள்ள தடுப்பு மருந்து மற்றும் வைரஸ் கெடில்லா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிப்பது முதற்கட்டத்தை நிறைவு செய்திருப்பதாக ஐசிஎம்ஆர் இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்க்கவா தெரிவித்துள்ளார்.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்து 11 இடங்களில் முதற்கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்ட பரிசோதனை தொடங்கி இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்த தடுப்பு மருந்தும் இந்தியாவில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.






