--- --:--:-- --

இளம்பெண் கொலை செய்யப்பட்டதாக கூறி உடல் தகனம்..! ஒரு வாரத்தில் வீட்டிற்கு இளம்பெண் வந்ததால் அதிர்ச்சி..!

5

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் மருமகளை கொலை செய்து சூட்கேசில் வைத்து வீசியதாக அலிகாரை சேர்ந்த பெண் அளித்த புகாரின் பேரில் மாமியார், மாமனார், கணவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

அந்தப் பெண்ணின் சடலம் தகனம் செய்யப்பட்டது. ஒரு வாரம் கடந்த நிலையில் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண் உயிரோடு திரும்பியதால் கொல்லப்பட்டது யார் என்ற குழப்பம் ஏற்பட்டது.

 

மாமியார் மற்றும் கணவனால் தாக்கப்பட்ட பெண் வர்ஷா வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் சில தினங்கள் கழித்து அழுகிய நிலையில் சூட்கேஸில் காணப்பட்டார். சடலத்தை தனது மகள் வர்ஷா என்று தாயார் தவறாக அடையாளம் காட்டியதால் ஒரு குடும்பமே கொலை வழக்கில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பது தெரியவந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon