--- --:--:-- --

சிவகங்கை மாவட்டத்தில் பெருகிவரும் திமுக உட்கட்சி பூசல் திமுக மாவட்ட செயலாளர் பெரியகருப்பனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

27

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றிய முன்னாள் செயலாளராகவும் கடந்த முறை சட்டமன்ற வேட்பாளராகவும் திமுகவில் கட்சி பணியாற்றி வந்த மேப்பல்சக்தி ஒன்றிய செயலாளர் மார்த்தாண்டன் சாக்கோட்டை ஒன்றிய முத்துராமலிங்கம் ஆகியோரை பதவிநீக்கம் செய்ததை தொடர்ந்து மேப்பல்சக்தியநாதன் தலைமையில் காளையார்கோவில் பஸ் நிலையம் முன்பு திமுக மாவட்ட செயலாளர் பெரியகருப்பனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்தில் 1000 மேற்பட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மேப்பல்சக்தியநாதன் தெரிவிக்கையில் சிவகங்கை மாவட்டத்தில் தா.கிருட்டிணன் இருக்கும் போது என்னை திமுகவில் இணைத்தார். இன்றுவரை தாகியார் வழியில் திமுகவிற்கு துரோகம் நினைத்தது இல்லை நான் சிவகங்கை சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் எனக்கு கட்சி நிர்வாகிகளிடம் நான் வெற்றி பெற்று விடக்கூடாது என்று தெரிவித்தவர் எனக்கு கெடுதல் விளைவித்த இந்த மாவட்ட செயலாளர் என்னை நிக்குவதற்க்கு பரிந்துரை செய்து நிக்கபட்டுள்ளேன். கடந்த சட்டமன்ற தேர்தலில் மாவட்ட செயலாளர் பெரியகருப்பனின் ஆபாச படங்களை வாட்சாப்பில் வெளியிட நாங்கள் தான் காரணம் மற்றும் பிற கட்சிகளுடன் தொடர்பு உள்ளது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை காரணம் காட்டி தலைமைக்கு புகார் தெரிவித்து நான் நிக்கபட்டுள்ளேன், இந்த புகாருக்கு மறுப்பு தெரிவிக்கிறேன், திமுக சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் நிர்வாகிகள் பலரும்  மாவட்ட செயலாளர் மேல் உள்ள கோபத்தில் மாவட்டம் முழுவதும் மற்றும்மின்றி அவரது செந்த திருப்பத்தூர் தொகுதியில் உள்ளவர்களே கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் மற்றும் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர் என்று தினசரி நாழிதலில் செய்தி வருகிறது.

 

இதற்கு மாவட்ட செயலாளர் மறுப்பு தெரிவிக்க முடியுமா என்னை நிக்கியதை பற்றி எனக்கு கவலை இல்லை பழைய நிர்வாகிகளை நியமிக்காமல் மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களை ஒன்றிய செயலாளராக நியமித்தது கண்டிக்கத்தக்கது என்றார் உடனே திமுக தலைவர் இதற்கான தீர்வு கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்றார்

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon