--- --:--:-- --

திருவாடானையில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!

10.2

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப் படுவதாகவும், வேலை அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்க கோரியும், ஊதியத்தை குறைக்காமல் முழு ஊதியத்தை கொடுக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது.

 

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தாலுகா குழு உறுப்பினர் நாகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் செயலாளர் அருள், பொருளாளர் மனோகரன் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முத்துராமன் சிறப்புரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon