சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கொரொனா தொற்று உறுதி..!
தமிழ்நாட்டில் கொரொனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே கொரொனா முன்களப் பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கும் கொரொனா தொற்று உறுதியாகி வருகிறது. இந்த நிலையில் கொரொனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தொற்று ஏற்பட்டு வரும் நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலக்ஷ்மிக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கோவை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுவரும் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.







