--- --:--:-- --

ரேஷன் கடைகளில் விலையில்லா முக கவசம் வழங்கும் திட்டம் தொடக்கி வைப்பு..!

12

மிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா முககவசம் வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

 

இன்று சென்னை மாநகராட்சி நீங்கலாக பிற பகுதிகளில் இருக்கக்கூடிய 69 லட்சத்து ஒன்பதாயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஒவ்வொரு குடும்ப அட்டையில் இருக்கக்கூடிய நபர்களுக்கு இந்த முக கவசம் வழங்கப்பட உள்ளது.

 

ஒரு நபருக்கு இரண்டு முகக் கவசங்கள் விகிதமாக 4 கோடியே 44 லட்சம் முகக் கவசங்கள் முதல் தவணையாக கொடுக்கப்பட உள்ளது. இது தவிர மற்ற பகுதிகளுக்கும் முகக் கவசங்கள் அடுத்தடுத்து வழங்கப்பட உள்ளன.

 

அவற்றின் முக்கியத்துவத்தை தொடர்ச்சியாக தமிழக அரசு சொல்லி வருகிறது. வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி போடாத வகையில் காட்டன் துணியில் ஆன முகக் கவசங்கள் வழங்கப்படுகின்றன.

Leave a Reply

Right Menu Icon