ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று முதல் 6 நாட்களுக்கு தளர்வுகள் இல்லாத முழு பொது முடக்கம்..!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று முதல் 6 நாட்களுக்கு தளர்வுகள் இல்லாத முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அதிகரித்து வரும் நிலையில் தற்காலிக காய்கறி சந்தையில் 20 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
துணை ஆட்சியர் முருகன் ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் இன்று முதல் வரும் ஒன்றாம் தேதி வரை பொது முடக்கம் அமல்படுத்தப் படுவதாக அறிவித்தார். பெட்ரோல் பங்குகள், பால் மற்றும் மருந்துகளை வைப்பதற்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் டாஸ்மாக் கடைகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.







