--- --:--:-- --

12ஆம் வகுப்பு தேர்வில் வெற்றியடைந்த மாணவியை மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பாராட்டிய மோடி..!

8

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற நாமக்கல்லை சேர்ந்த மாணவிக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் மனதின் குரல் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது.

 

இன்று பிரதமர் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசும்போது நாமக்கல்லை சேர்ந்த ஏழை லாரி ஓட்டுனர் நடராஜன் என்பவரின் மகள் கனகா சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் 500-க்கு 490 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்ததை குறிப்பிட்டு பேசினார்.

 

ஏழை குடும்பத்தில் பிறந்து மிக நல்ல முறையில் கல்வி கற்று இன்று மருத்துவராக வரவேண்டும் என்ற கனவுடன் லட்சியத்துடன் தமது கல்வி பயணத்தை தொடரும் மாணவிக்கு பிரதமர் தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 

மேலும் நாமக்கல் என்றாலேயே தனக்கு ஆஞ்சநேயர் கோவில் தான் நினைவுக்கு வரும் என்று தெரிவித்த பிரதமர் இனி உங்கள் ஞாபகம் வருவதும் கனிகா என்று அந்த மாணவியை பாராட்டியுள்ளார். ஊக்குவிக்கும் வகையில் பிரதமரின் பேச்சு அமைந்திருந்ததாக மாணவி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon