--- --:--:-- --

உறவினர்கள் வராததால் இந்து முதியவரை அடக்கம் செய்த இஸ்லாமிய இளைஞர்..!

4

?????????????????????????????????????????????????????????

கொரோனா அச்சம் காரணமாக ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த இந்து முதியவருக்கு இறுதி சடங்கு செய்ய உறவினர்கள் யாரும் முன்வராத நிலையில் இஸ்லாமிய இளைஞர்கள் இந்து முறைப்படி அடக்கம் செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால்.

 

62 வயதாகும் வேணுகோபால் உறவினர்களால் கைவிடப்பட்டு இரு வருடங்களுக்கு மேலாக அதே பகுதியில் உள்ள ஒரு அனாதை இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்தான் சில தினங்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடைசி காலம் என்பதை உணர்ந்து கொண்ட வேணுகோபால் இறுதியாக ஒருமுறை தன் குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

 

கொரொனா அச்சம் காரணமாக அவரது குடும்பத்தினர் அவரை சந்திக்க விரும்பவில்லை. தன் கடைசி ஆசை நிறைவேறாமலேயே நேற்று முன்தினம் தனது இல்லத்திலேயே வேணுகோபால் மரணமடைந்தார். அவரது உடலை வாங்கி இறுதி சடங்கு செய்யக்கூட உறவினர்கள் யாரும் வரவில்லை.

 

இந்த தகவல் கிடைத்ததும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் முகமது என்பவர் காவல் நிலையத்திற்கு சென்று இறந்து போன முதியவரின் உடலை அடக்கம் செய்ய முறையான அனுமதி பெற்றார். முகமது ஆசிப் அவரது நண்பர்களும் சேர்ந்து இந்து முறைப்படி கோபாலுக்கு இறுதி சடங்கு செய்து முடித்தனர்.

 

முகமது ஆசிப் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அறக்கட்டளை ஒன்றை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. கொரோனா  அச்சம் காரணமாக உறவினர்களே கைவிட்ட நிலையில் இந்து மதத்தை சேர்ந்த வேணுகோபால் உடலுக்கு கொள்ளி வைத்த முகமது ஆசிப்பின் மனிதாபிமான செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

Right Menu Icon