--- --:--:-- --

சேமித்து வைத்திருந்த பணத்தை காவலர்களின் நிவாரண நிதிக்காக வழங்கிய 7 வயது சிறுமி..!

11

திருவள்ளூர் அருகே 7 வயது சிறுமி ஒருவர் தான் சைக்கிள் வாங்கி சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை காவலர்களின் நிவாரண நிதிக்காக வழங்கினார்.

 

உளுந்தை பகுதியை சேர்ந்த ரகுநாதன் என்பவரின் 7 வயது மகள் பூஜிதா சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் ஆயிரத்து 121 ரூபாய் சேர்த்து வைத்திருந்தார். அதனை காவலர்களின் நிவாரண நிதிக்காக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனிடம் பெற்றோருடன் சென்று வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் சிறுமியை பாராட்டினார்.

Leave a Reply

Right Menu Icon