--- --:--:-- --

“ரூ.67.9 கோடி இழப்பீடு”!! ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் அரசுடைமை ஆனதாக தமிழக அரசு அறிவிப்பு..! ஜெ. தீபா கடும் எதிர்ப்பு!!

cee1ebba-bc33-497f-801b-32c5e21ab4aa

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளன. இதற்கான இழப்பீட்டு தொகை ரூ.67.9 கோடியை நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி விட்டதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ள ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளில் ஒருவரான ஜெ. தீபா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், சட்ட ரீதியில் போராடி போயஸ் இல்லத்தை மீட்டெடுப்பேன் என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்பது அதிமுக இரு அணிகளாக பிரிந்து கிடந்த போது ஓ.பி.எஸ். தரப்பின் கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது. இரு அணிகளும் இணைய பேச்சுவார்த்தை நடந்த போது, முதல்வர் இபிஎஸ் இதற்கு சம்மதித்தார். தொடர்ந்து நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஆனால் ஜெயலலிதாவின் சட்டப்ப்பூர்வ வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட அவரது அண்ணன் மகன் ஜெ.தீபக், மகள் ஜெ.தீபா ஆகியோர் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

 

தமிழக அரசு டெபாசிட்

 

இந்த வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளது. இந் நிலையில், போயஸ் கார்டன் இல்லத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றுவதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான இழப்பீட்டு தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி உள்ளது. 24 ஆயிரத்து 322 சதுர அடி பரப்பு கொண்ட போயஸ் கார்டன் இல்லத்திற்கு இழப்பீட்டு தொகையாக ரூ.67.9 கோடியை நீதிமன்றத்தில் தமிழக அரசு டெபாசிட் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

உரிய இழப்பீட்டுத் தொகையை அரசுத் தரப்பில் செலுத்தியதால் போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமை ஆக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு கூறி உள்ளது. இழப்பீட்டு தொகையை சம்பந்தப்பட்டவர்கள் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

 

மேலும், போயஸ் கார்டன் இல்லத்தின் ஒரு பகுதியை முதல்வரின் முகாம் அலுவலகமாக மாற்ற முடியுமா? என சென்னை உயர் நீதி மன்றம் சமீபத்தில் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு தமிழக அரசின் இன்றைய அறிவிப்பில், சாத்தியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சட்டரீதியாக மீட்டெடுப்பேன்

 

“போயஸ் இல்லத்தை அரசுடைமை ஆக்கி விட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு ஜெ. தீபா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். போயஸ் இல்லத்தை சட்டரீதியாக மீட்டெடுப்பேன் என்றும் தமிழக அரசு போயஸ் இல்லத்தை அரசுடைமையாக்கியதை எதிர்த்து தாமும் ஜெ. தீபக்கும் சட்ட ரீதியாக மேல்முறையீடு செய்வோம் எனவும் ஜெ.தீபா திட்டவட்டமாக அறிவித்துள்ளார்”


https://www.kuttramkuttrame.com/2020/07/25/corona-echoes-mla-in-puducherry-sudden-change-of-venue-for-the-meeting-of-the-legislators/

மேலும் படிக்க..

Leave a Reply

Right Menu Icon