வறுமையால் வயிற்று பிழைப்புக்காக சிலம்பம் சுற்றும் 75 வயது மூதாட்டி..!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 75 வயது மூதாட்டி ஒருவர் சிலம்ப கலையை வெளிப்படுத்தி பிச்சை எடுத்து வருவது காண்போரை கலங்க வைப்பதாக உள்ளது. கொரொனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் அந்த மூதாட்டி வயிற்றுப் பிழைப்புக்காக தான் கற்ற கலையை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சாலையோரம் நின்று இரு கைகளிலும் சிலம்பம் சுற்றி அசாத்திய திறமையை அவர் வெளிப்படுத்தி வருகிறார். சிலம்பத்தை சுற்றி முடித்த பிறகு தனது இரு கைகளையும் கூப்பி தனது வயிற்றை காட்டி அவர் பிச்சை எடுப்பது காண்போரை கலங்க வைத்துள்ளது. இது சமூக ஊடகங்களில் வெளியான நிலையில் மூதாட்டிக்கு உதவ பலர் முன் வந்துள்ளனர்.






