எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவித்து அவமரியாதை..! மனவேதனை அளிக்கிறது அளிப்பதாக கூறிய முதல்வர்..!
எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அறிவித்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு இருக்கும் அவர் சாதி, மதங்கள் கடந்த சமத்துவத்தின் அடையாளமான புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் சிலைக்கு மர்ம நபர்கள் காவி துண்டு அணிவித்து களங்கப்படுத்திய கொடுஞ்செயல் வேதனை அளிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இந்த காட்டுமிராண்டித் தனம் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும் மொழி, இனம், மதம், சாதியால் வேறுபட்டிருந்தாலும் இந்தியர் என்ற சொல்லில் பெருமிதம் கொள்வதாகவும் ஒருமைப்பாட்டுக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவித்து அதன் மூலம் ஓட்டு அரசியல் பிழைப்புக்கு சிலர் திட்டமிடுவதை தமிழினம் ஏற்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தரமற்ற விமர்சனங்களால் பிற மனங்களை காயப்படுத்துவது நாகரிகமற்ற செயல் என்று தெரிவித்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் சிலைக்கு அவமரியாதை செய்த விஷமிகளை விரைந்து கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.






