கொரொனாவால் உயிரிழந்த தாய்..! ஜன்னலில் ஏறி தாயின் கடைசி நிமிடங்களை பார்த்த இளைஞன்..!
உலகத்தைத் தனது கைப்பாவை போல மாற்றி உயிர்களோடு விளையாடி வரும் கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸால் மனித குலம் என்றுமே சந்தித்திராத வேதனைகளை எதிர்கொண்டுள்ளது. இதனை ஆவணபடுத்தும் மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. காண்போர் நெஞ்சை பிழியும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஜிகாத்- அல்-சுவைத்தி என்ற பாலஸ்தீன இளைஞனுக்கு கொரோனாவால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தனது அன்புக்குரிய தாயை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. மருத்துவமனையில் மரணத் தருவாயில் இருந்த தனது தாயை பார்க்க இயலாத தாய் அந்த இளைஞன் அந்த மருத்துவமனையின் ஜன்னலில் ஏறி அமர்ந்து கொண்டார்.
தனது தாய் தனது இறுதி மூச்சை சுவாசித்து முடிப்பதை கனத்த இதயத்தோடு கண்ணீருடன் இந்த இளைஞர் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தது கல் மனம் கொண்டோரையும் கலங்கச் செய்தது. இந்த ஒரு புகைப்படம் கொரொனாவின் கோரத்தையும் அது எந்த அளவிற்கு மனித குலத்தை கையறு நிலைக்கு கொண்டு செல்கிறது என்பதையும் விளக்குகிறது.
இந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு பலரும் தங்களது வேதனைகளை பகிர்ந்த வண்ணம் உள்ளனர். இந்த இளைஞனின் தாய் ஆகச்சிறந்த அன்புத் தாயாக இருந்திருக்கவேண்டும் என்று பலரும் தெரிந்து கூறியுள்ளனர்.







