--- --:--:-- --

இந்தியாவில் கண்டுபிடிக்கபட்ட கோவாக்ஸின்..! மனிதர்கள் மீதான பரிசோதனை தொடக்கம்..!

9.1

இந்தியா தயாரித்துள்ள கொரொனா தடுப்பு மருந்தான கோவாக்ஸினை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதனை தொடங்கப்பட்டு உள்ளது. நம் நாட்டிலேயே தயாரிக்கப்படும் கோவாக்சின், சைகோட்டின் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகளை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் சோதனைகள் தொடங்கியுள்ளன .

 

இந்த பரிசோதனை மூன்று கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக சோதனைக்கு உட்பட உள்ள மனிதர்கள் ஆரோக்கியமானவர்களாக இருக்கிறார்களா என்று கண்டறியபடுவார்கள். ஒவ்வொரு தடுப்பு மருந்துக்கும் அதற்குரிய நபர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஆய்வாளர்கள் குழு உள்ளது. பரிசோதனைகளில் பங்கு பெறக் கூடியவர்கள் தொடர்பான தகவல்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

 

குறிப்பிட்ட நபர் பரிசோதனையில் இருந்து இடையே விலக விரும்பினால் அதற்கான முழு உரிமையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இரண்டாவதாக தடுப்பூசி என்ன நோக்கத்திற்காக கண்டறியப்பட்டதோ அந்தப் பணியை சரியாக செய்கிறதா என்பதை பரிசோதிப்பார்கள். சோதனைக்கு உட்படும் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டு கணிக்கிடப்படுகிறது.

 

மூன்றாவது கட்டமாக சோதனையில் பங்குகொண்ட நபர்களை முழுமையாக ஆய்வு செய்து ஊசி மூலமாக தடுக்கும் மருந்து செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்படும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட நபரின் ரத்தம், சிறுநீர் சோதனைக்காக சேகரிக்கப்படும்.ஐ சி எம் ஆர் இன் வழிகாட்டுதலின் படி ஒவ்வொரு பரிசோதனைகள் மற்றும் முடிவுகள் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட நபரிடம் அவ்வபோது தெரிவிக்க வேண்டும்.

 

பரிசோதனையின் போது பிரச்சனை ஏற்பட்டால் அந்த நபருக்கு இழப்பீடு வழங்கப்படும். முதல் கட்டமாக இணை நோய் ஏதும் இல்லாத 18 முதல் 58 வயது வரையிலான 375 பேரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் ரந்திப் குலேரியா தெரிவித்துள்ளார். இரண்டாவது கட்டத்தில் 12 முதல் 65 வயது வரையிலான 750 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon