பரோட்டா வாங்க சுவர் ஏறி குதித்து சென்று வரும் கொரொனா நோயாளி..!
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தில் கொரோனா முகாமிலிருந்து கொரொனா நோயாளி ஒருவர் பரோட்டா வாங்க சுவர் ஏறி குதித்து கடைக்கு சென்று திரும்பியது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இடம் இல்லாததால் அருகில் உள்ள தனியார் பள்ளி வளாகம் ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று பள்ளியை ஒட்டியுள்ள வீட்டின் வழியாகக் கொரொனா நோயாளி ஒருவர் பரோட்டா வாங்க தப்பிச்சென்ற தொடர்பான சிசிடிவி காட்சி வெளியானது. விசாரணையில் நோயாளிகள் சிலர் அவ்வப்போது சுவர் ஏறி குதித்து கடைகளுக்கு சென்று திரும்பியது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தமிழகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் கொரொனாவின் வீரியம் புரியாமல் சிலர் செய்யும் இம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கொரொனா பாசிடிவ் என முடிவு வந்தவுடன் அந்த நபர்கள் தனிமைப் படுத்தப் படுகின்றனர்.
ஆனால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கட்டுப்பாடுகளை மீறி அஜாக்கிரதையாக செயல்படுவதால் மற்ற மக்களும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சுகாதாரத்துறைக்கும் இது பெரும் தலைவலியாகவே இருக்கும்.






