உத்தர பிரதேசத்தில் 12 ஆம் வகுப்பில் ஒரே மதிப்பெண் பெற்று அசத்தியுள்ள சகோதரிகள்..!
உத்தர பிரதேசத்தை சேர்ந்த இரட்டை சகோதரிகள் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் 5 பாடங்களிலும் ஒரே போன்று சம அளவிலான மதிப்பெண்கள் பெற்று இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டன் நொய்டாவை சேர்ந்த மான்சி, மான்யா ஆகிய இருவரும் இரட்டை சகோதரிகள் ஆவர்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதி இருந்த அவர்கள் இருவரும் சொல்லி வைத்தது போல 5 பாடங்களிலும் சரிசமமான மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்கள். இருவரும் 95.8 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளது அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம் ஆனால் ஒரே போன்று மதிப்பெண் பெறுவது என நினைக்கவில்லை என்று மான்சி தெரிவித்தார்.






