--- --:--:-- --

உமிழ்நீர் மூலம் கொரொனா பரிசோதனை..!

5

கொரொனா தொற்று இருப்பதை உமிழ் நீர் பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியுமா என அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

 

வழக்கமான தொண்டை சளிக்கு பதிலாக உமிழ்நீரை சோதித்து கொரொனா இருப்பதை உறுதிப்படுத்த முடிந்தால் அது பல வழிகளில் நன்மை பயப்பதாக இருக்கும் என ஆய்வு குழுவின் தலைவர் பேராசிரியர் ஜெனிபர் தெரிவித்துள்ளார். உமிழ்நீர் பரிசோதனையை விரைவாக செய்ய முடிவதுடன் இதற்கான மாதிரியை எடுக்க பயிற்சி பெற்று நபரும் பாதுகாப்பு உடைகளும் தேவையில்லை என்று ஜெனிஃபர் தெரிவித்தார்.

 

கொரொனா பரிசோதனைக்கு உட்படுத்துபவரை சோதனை குழாயில் ஒரு மில்லி அளவுக்கு உமிழ் நீரை துப்பினால் போதுமானது என்று அவர் கூறினார். கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் நடப்பது தவிர வேறு 3 உமிழ்நீர் பரிசோதனைகளும் அமெரிக்காவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon