--- --:--:-- --

கோவையில் சுய பாதுகாப்பு முழு கவச உடை (PPE kit) அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துறையினர்! காவல் துறையினர் தொடர்ச்சியாக கொரோனாவால் பாதிக்கப்படுவதன் எதிரொலி !!!

19

கோவையில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களை மட்டுமே குறி வைத்த கொரோனா வைரஸ் தற்போது காவல் துறையினரையும் விட்டுவைக்கவில்லை.கோவை மாவட்ட காவல் துறையில் போத்தனூரில் இருவரும்,சூலூரில் இருவரும்,சிசிபியில் ஒருவரும்,ஆர்ஏபிஎஃப்பில் மூவரும்,துடியலூரில் 7 பேர் என 15 க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு உள்ளனர்.

 

கோவை மாவட்டத்தில் போத்தனூர்,துடியலூர்,சூலூர் உள்ளிட்ட காவல் நிலைய காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அக்காவல் நிலையங்கள் ஏற்கனவே மூடப்பட்டன.இந்த நிலையில் இன்றும் மதுக்கரை காவல் நிலையத்தை சேர்ந்த 7 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து அனைவரும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.பாதிக்கப்பட்ட காவலர்கள் 7 பேரும் பேட்ரோல் ரோந்து பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து மதுக்கரை காவல் நிலையமும் மூடப்பட்டது.காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து வேறு இடத்துக்கு மதுக்கரை காவல் நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டது.கோவை மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த காவலர்களுக்கு தொடர்ச்சியாக கொரோனா வைரசின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் மற்ற காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இன்று கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் மதுக்கடையை மூட வலியுறுத்தி SDBI கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தின் போது கோவை மாநகர காவல் துறையினர் சுய பாதுகாப்பு முழு கவச உடை (PPE kit) அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களின் பணி மகத்தானது.அவர்களை காக்க வேண்டியது அரசின் கடமை.அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை உடனடியாக வழங்கி மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை காக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon