மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை ஆட்சியர் ஆய்வு!
தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இராமநாதபுரம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த காலாண்டு தணிக்கை ( Quarterly Inspection ) இன்று ( 15.07.2020 ) மேற்கொண்டார் .
2019 – ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது இராமநாதபுரம் மாவட்டத்தில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இராமநாதபுரம் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன . இந்த பாதுகாப்பு மையம் இரட்டை பூட்டு முறையில் ( Double Lock ) சீல் வைக்கப்பட்டுள்ளது . தொடர்ந்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஆயுதம் ஏந்திய காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .
சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது . இந்நிலையில் , இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த காலாண்டு தணிக்கை மேற்கொண்டார்.
பாதுகாப்பு மையத்திற்கு வைக்கப்பட்டுள்ள முத்திரை ( Seal ) , சிசிடிவி கேமரா செயல்பாடு , பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் பதிவேடு , தீயணைப்பான் ( Fire Extinguisher ) காலாவதி நாள் ஆகியவை குறித்து ஆய்வு செய்தார்.






