திருவாடானையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் அரசு விலையில்லா புத்தகங்கள்..!
திருவாடானையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியும், ஆங்கில வழி கல்வியும், பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த பள்ளியில் 80 மாணவிகள் 10ம் வகுப்பிலும், 110 மாணவிகள் 12ம் வகுப்பிலும் கல்வி கற்று வருகிறாகள்.
பன்னிரண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்புக்கான 2020-2021ம் ஆண்டிற்கான அரசின் விலையில்லா புத்தகங்களை ஊராட்சி மன்ற தலைவர் காந்தி சுப்புரமணியன் தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் கலா முன்நிலையில்.வழங்கினார்கள்.
;
பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணிணி மூலம் புத்தகங்களில் பதிவேற்றம் செய்து வழங்கினார்கள். கணினியில் பதிவேற்றம் செய்து புத்தகங்களை வழங்கியுள்ளது இதுவே முதல் முறை ஆகும்.






