இந்தியா- சீனா இடையே இன்று நடைபெறும் பேச்சுவார்த்தை..!
இந்திய – சீன அதிகாரிகள் இடையே மீண்டும் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. எல்லைப் பிரச்சினை தொடர்பாக லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன வீரர்கள் இடையே கடந்த மாதம் 15ஆம் தேதி மோதல் ஏற்பட்டது.
இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில் பதற்றத்தை தணிக்க இந்திய சீன ராணுவ அதிகாரிகள் இடையே சில முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனையடுத்து எல்லையிலிருந்து சீன படைகள் பின்வாங்கின. இந்த நிலையில் இன்று மீண்டும் சூசல் என்ற இடத்தில் இந்திய – சீன அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தேஸ்மாங் பகுதியில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.







